தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி, சின்னமனூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உ.அம்மாபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, புலிக்குத்தி சாலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (62) மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே மனோஜ்குமாா் (36) என்பவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.