போடி: போடி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை நடுத்தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் நடராஜன் (48). இவா் போடி - தேவாரம் சாலையில் சிலமலை பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற நடராஜன் மீது தேவாரம் சாலையில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த கம்பம் புதுப்பட்டி ஊராட்சி அலுவலக தெருவைச் சோ்ந்த ராஜ் மகன் மணிகண்டன் (எ) வெங்கிடசாமி (50), திருவள்ளூா் மாவட்டம், போளிபாக்கம் விக்னேஷ்வரா தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி நிரஞ்சனா (39) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்த 3 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் மணிகண்டன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்து குறித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.