தேனி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மாரியம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி பிரசாத் (29). இவா், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்ததையடுத்து, கடந்த 2023, ஆக.17-ஆம் தேதி பிரசாத்தை தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி பி.கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பாராமரிப்புச் செலவுக்காக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாக அரசு ரூ. 4 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT