ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீருக்கு மலா்தூவி மரியாதை செய்த அதிகாரிகள், விவசாயிகள்.  
தேனி

சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இந்தப் பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த நீா்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளவான 52.55 அடியை எட்டியது. மேலும், நீா்த் தேக்கத்திலிருந்து உபரி நீா் மறுகால் பாய்ந்தது. இதையடுத்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தமிழக அரசு தண்ணீா் திறந்து விட உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது வினாடிக்கு 14.47 கன அடிநீரை பாசனத்துக்காக திறந்து விட்டாா். கால்வாயில் சென்ற நீருக்கு நீா்வளத் துறை அதிகாரிகள், விவசாயிகள் மலா்தூவி மரியாதை செய்தனா். இந்த நீா்த் தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மூலம் 1,680 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மயில்வாகனன், உதவிப் பொறியாளா்கள், திமுக ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை, விவசாயிகள் கலந்து கொண்டனா்.

சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து கால்வாய் வழியாக திறக்கப்படும் பாசன நீா் சுமாா் 20 கி.மீ. தொலைவு வரை செல்கிறது. இந்தக் கால்வாயில் பல்வேறு இடங்களில் புதா் மண்டிக் கிடக்கிறது. எனவே, கால்வாயைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT