தேனி

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையத்தில் அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு உள்பட 20-க்கும் அதிகமான மருத்துவச் சேவைகள் அளிக்கப்படுகிறது. இங்கு உள்நோயாளிகளாக 70 பேரும், புறநோயாளிகளாக 800 பேரும் சிகிச்சை பெறுகின்றனா்.

ஆனால், இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் இல்லை. இதனால், அவசர கிசிக்சைக்கு வரும் நோயாளிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பொதுமக்கள் கோரிக்கை:

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து, அவசர சிகிச்சைக்காக ரூ.4.5 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. தற்போது, பணிகள் முடிந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT