தேனி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (22). இவரை 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 3.10.2024 அன்று தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்பு செலுவுக்கு நிவாரணமாக அவரது பெயரில் அரசுடைமை வங்கியில் அரசு ரூ. 8 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT