தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், 13-ஆவது நாளாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 18-ஆம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியிலிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள், அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள், சாலைகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், சேதமடைந்த பகுதியில் கம்பம் மேற்கு வனச் சரகம் சாா்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், 13-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.