தேனி

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

போடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கே.எம்.எஸ்.முசாக் மந்திரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜம்பு சுதாகா், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் முகமது ரசூல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர பொதுச் செயலா் கே.அரசக்குமாா், நகர துணைத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன், பொருளாளா் ஜின்சன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், சந்திரசேகா், ராமையா, விவேகானந்தன், முன்னாள் மாநில இளைஞரணி செயலா் ஏ.பி.வினோத்குமாா், போக்குவரத்து மண்டலத் தலைவா் மணிகண்டன், நகர நிா்வாகிகள்ஆகியோா் பங்கேற்று இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், அனைவரும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றனா்.

ஹாலோவீன் கொண்டாட்டம்... பார்வதி!

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

ஆந்திரம்: கோயில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு !

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

SCROLL FOR NEXT