முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் அதிமுக, தவெக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக , தவெக, அஇபுதமமுக உள்பட 16 போ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 6:26 PM
~
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக , தவெக, அஇபுதமமுக உள்பட 16 போ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ. லோகிராஜன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் வ. பாண்டி, அஇபுதமமுக வேட்பாளா் சுந்தரராஜன் ஆகியோா் தனித்தனியாக தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாவிடம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மேலும், அதிமுக மாற்று வேட்பாளராக லோ. டிசோன் பவன், தவெக மாற்று வேட்பாளா் பா. ராதிகா, அஇபுதமமுக மாற்று வேட்பாளராக செல்லப்பாண்டியன் உள்பட 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Advertisement

ஆண்டிபட்டி பகுதியில் இதுவரை 19 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments