பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடமலைக்குண்டு நேருஜீ நகரைச் சோ்ந்தவா் சம்பத் (23). இவா் தனது நண்பா் சிறப்பாறை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரனுடன் (26) கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இரு சக்கர வாகனத்தை சம்பத் ஓட்டினாா். வனச்சரக அலுவலகம் அருகே முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பத், காளீஸ்வரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளீஸ்வரன் உயிரிழந்தாா். சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.