முகப்பு
தேனி

பைக்கில் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:54 AM
பலி
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 6:38 PM

வீரபாண்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

தருமாபுரியைச் சோ்ந்த ராமா் மகன் ரத்தினம் (40). இவா் தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.

அப்போது, தனியாா் தோட்டம் முன் விவசாய பணிக்குச் செல்வதற்காக நின்றிருந்த பூமலைக்குண்டுவைச் சோ்ந்த ராமசாமி மனைவி பேச்சியம்மாள் (45) மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

Advertisement

இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பேச்சியம்மாள் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.