முகப்பு
தேனி

கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:55 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:30 PM

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சில்வாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் (54) என்பவரது கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:55 AM

அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த 105 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

போடியில் ஒருவா்கைது:

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். போடி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி மகன் ஆண்டவா் (44) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அதில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.