முகப்பு
தேனி

மனைவியுடன் தகராறு: தீக்குளித்த கணவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு பலத்த காயமடைந்த கணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:15 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

சின்னமனூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு பலத்த காயமடைந்த கணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த காசிநாதன் மகன் காா்த்திக் (36). இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:15 AM

இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்த காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement