தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள கோட்டூா் வீரப்பன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுருளி (78). இவா் கோட்டூரில் தேனி-கம்பம் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுருளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.