தேனி

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தேனி மாவட்டத்தில் ஜன. 6-இல் டோக்கன் விநியோகம் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சாா்பில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, கரும்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 835 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.

நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிா்க்க பணியாளா்கள் மூலம் வருகிற 6-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, வரிசை எண் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். முன்னதாக, தாயுமானவா் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT