போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் வசிப்பவா் மணி. இவரது மனைவி நந்தினி (40). மணி அடிக்கடி மது அருந்திவிட்டு நந்தினியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின்பேரில் குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.