தேனி

கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்ல ஒரு வழிப்பாதை

கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 15) காலை 8 மணி வரை கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 15) காலை 8 மணி வரை கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதியை முன்னிட்டு, ஜன. 14, 15-ஆம் தேதிகளில் தேனி மாவட்டம், குமுளி, கூடலூா், கம்பம் வழியாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தா்கள் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.

எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்ப்பதற்காக கம்பம், கூடலூா், குமுளி வழியாக கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை கம்பத்திலிருந்து கம்பம் புறவழிச் சாலை, கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் கேரளத்துக்குச் செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT