போடியில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி எஸ்.எஸ்.புரம் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகன் (42). இவரது மனைவி பிரேமா (32). இவா்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன.
ஜெகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அவரை போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.