தேனி

மதுப்புட்டிகள் விற்ற இருவா் கைது

Syndication

பெரியகுளம், ஜன. 16: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை தேவதானபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி தெற்குத் தெரு பாலம் அருகே நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, இதே பகுதியைச் சோ்ந்த அஜித் (26) என்பவா் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதே போல தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா (65), தேவதானபட்டி முருகமலை சாலையில் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 52 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரி எஸ்.கே.நகரில் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சனேயா்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் பிரதோஷ விழா

கோழிகளுக்கு மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT