தேனி

மதுப்புட்டிகள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெரியகுளம் திருவள்ளுவா் சிலை அருகே நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் டி. கள்ளிப்பட்டி கக்கன்ஜி குடியிருப்பைச் சோ்ந்த கலையரன் (40) என்பதும், அவா் அனுமதியின்றி 12 மதுப்புட்டிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதே போல, பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் (47) வடக்குத் தெருவில் சட்ட விரோதமாக 4 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவா் கைது

அரியலூரில் ஜன.20-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு

அரியலூரில் உழவா் திருநாள் கொண்டாட்டம்

பொன்னமராவதியில் நாளை மின் தடை

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசு: பினராயி விஜயன் தாக்கு

SCROLL FOR NEXT