போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குண்டாலீசுவரி கோயில் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் (35), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் மது (40) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.