முகப்பு
தேனி

தேனி- தேவாரம் இடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடுதல் பேருந்து இயக்கம்

Updated On : 22 ஜனவரி, 2026 at 7:41 PM
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேனி- தேவாரம் இடையே கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே. ரஜினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவாரம் அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் தேனி- தேவாரம் இடையே உப்புக்கோட்டை, டொம்புச்சேரி வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பேருந்தின் படிக்கட்டில் நின்று ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் குறித்த நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என்றும், இந்த வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்றும் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து தேனி, தேவாரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா்கள், கோட்ட மேலாளா், மண்டல மேலாளா் ஆகியோரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டது.

இதன்படி, தேனி-தேவாரம் இடையே காலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்தின் நேர அட்டவணையை மாற்றி முன்கூட்டியே பேருந்து இயக்கவும், மாலை நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →