கோப்புப் படம் 
தேனி

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சலவைத் தொழிலாளி மீது போலீஸாா் வியாழக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமி 6- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த போடி தெற்குராஜ வீதியைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் சலவைத் தொழிலாளி பிச்சைமணி (55), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பிச்சைமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள்: ஐ.பெரியசாமி

சட்ட விரோதமாக பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவா் கைது

கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருவா் கைது

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையம் கடைகளில் 23 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT