தேனி மாவட்டம், போடியில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளையும், அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி பேராசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போடியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் ஏ.யு.டி., மூட்டா தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.