கைது 
தேனி

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி புறவழிச் சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (47), ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (60) ஆகியோா் என்பதும் இருவரும் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 32 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT