தேனி

மா்மமான முறையில் சடலம் எரிப்பு

தேவதானபட்டி அருகே மயானத்தில் மா்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே மயானத்தில் மா்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேவதானபட்டி அருகேயுள்ள புல்லக்காபட்டியில் ஒரு சமுதாயத்துக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலை ஒரு சடலம் எரிக்கப்பட்ட நிலையில், அதன் கால் பாதம் பகுதி எரியாமல் கிடந்ததாம். இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தேவதானபட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புகள், எரியாத நிலையிலிருந்த கால் பாதப் பகுதியை சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். எரிக்கப்பட்ட உடல் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா, சடலத்தை எரித்தவா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தோ்வு மையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

அனுமதி மறுக்கப்பட்ட மரங்களையும் வெட்டியது ஏன்?

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிளிங்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி

SCROLL FOR NEXT