போடி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி மீனாட்சிபுரம் மயானம் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்துக்குமாா் (20) என்பவரும், சிலமலை சுடுகாடு அருகே தேவாரத்தைச் சோ்ந்த பரமன் மகன் அழகுராஜா (23) என்பவரும் கஞ்சாவுடன் நின்றனராம். இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.