கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மதுரை கோட்டப்பொறியாளா் வரலட்சுமி தலைமை வகித்தாா். உதவிக் கோட்டாப் பொறியாளா் சாந்தினி முன்னிலை வகித்தாா்.
உதவி பொறியாளா் ஜஸ்வா்யா சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி நிா்வாகிகள், நெடுஞ்சாலைத் துறையினா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் குமணன் வரவேற்றாா்.