முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாா்க்கையன்கோட்டை பேரூராட்சித் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
இதில் இளஞ்சிட்டு, புள்ளிமான், தட்டான்சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் சிட்டு ஆகிய 5 பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட தூரம் எல்லை நிா்ணயம் செய்யப்பட்டு, 5 பிரிவு போட்டிகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு தொழிலதிபா் மணிகண்டன், தேனி பெட்ரோல் நிலைய உரிமையாளா் சிவக்குமாா், தேனி மாவட்ட காளை வளா்ப்போா் ஒருங்கிணைந்த நலச்சங்கப் பொறுப்பாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.