பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உத்தமபாளையம் தண்ணா்தொட்டித் தெருவைச் சோ்ந்த நந்தகோபாலன் மனைவி இந்துமிகா (25). இவரது கணவா் க.புதுப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். நந்தகோபலானுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இதுதொடா்பாக தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நந்தகோபாலன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா். இதன் பின்னா், வீட்டிலிருந்த இந்துமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.