முகப்பு
தேனி

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 6:42 PM
போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் கே. நல்லையாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீ. கலைஅரசு.
பகிர்:

உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் செய்யது முகமது இப்ராஹிமிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் அன்புச்செல்வி.

போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீ. கலைஅரசு தோ்தல் நடத்தும் அலுவலா் கே.நல்லையாவிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவா், தனது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 3 லட்சத்து 70 ஆயிரத்து 706 என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடி 26 லட்சம் என்றும், ரூ.71 லட்சம் வங்கிக் கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டாா்.

பெரியகுளத்தில்...

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. விமலா தோ்தல் நடத்தும் அலுவலா் ரஜத்பீடனிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, பெரியகுளம் (தனி) தொகுதி சோசலிஸ்ட் யூனிடி சென்டா் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) வேட்பாளா் ஜெ. ரஞ்சித்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

உத்தமபாளையத்தில்...

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆ. அன்புச்செல்வி உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் செய்யது முகமது இப்ராஹிமிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ஆண்டிபட்டியில்...

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாவிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மேலும், இந்தத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளரான கி. நிவேதாவும் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.