முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏழைகளுக்கு உதவிகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில்  ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில்  ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மறைவட்ட அதிபர் மற்றும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தை எஸ்.சேவியர்ராஜ் தலைமையேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ்.சார்லஸ் மனோகரன் முன்னிலை வகித்தார்.

சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானலெட் சொர்ணகுமாரி, நகராட்சி கிருஷ்ணன்கோவில் நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை வரமணி, மாணவி ஜெபா ஆகியோர் இறைவணக்கம் பாடினர்.

ஒய்.எம்.சி.ஏ. செயலாளர் ஜி.எட்வின் கனகராஜ் வரவேற்றார்.

விருதுநகர் ஆவின் பொது மேலாளர் சதாசிவம், தமிழாசிரியை ஜாய்ஸ் ஜெயச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் தூய தோமா தேவாலயத்தின் உதவி குரு சாம்பிரபு உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ஒய்.எம்.சி.ஏ. உறுப்பினர்களின் குழந்தைகளில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுமார் 200 ஆதரவற்றோர், ஏழைகள், பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச உடை, உணவு உள்ளிட்டவற்றை, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.அருமைநாயகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஒய்.எம்.சி.ஏ. துணைத் தலைவர் டி.ராஜரத்தினம், பொருளாளர் எம்.மார்ட்டின் லூதர், துணைச் செயலாளர் ஜே.ஜார்ஜ் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →