முகப்பு
விருதுநகர்

600 ஏக்கரில் தண்ணீரின்றி கருகிய மக்காச்சோளப் பயிர்

காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணர், திம்மன்பட்டி, புளியம்பட்டி, வில்லிபத்திரி, வரலொட்டி, அழகியநல்லூர், மாந்தோப்பு பகுதியில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தண்ணீர் இல்லாததால், கருகி சாய்ந்ததால் விவசாயிகள்

Updated On : 30 டிசம்பர், 2012 at 1:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:36 AM

காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணர், திம்மன்பட்டி, புளியம்பட்டி, வில்லிபத்திரி, வரலொட்டி, அழகியநல்லூர், மாந்தோப்பு பகுதியில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் தண்ணீர் இல்லாததால், கருகி சாய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

   இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 600 ஏக்கரில் மக்காச்சோளம்

பயிரிட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்த இப்பயிர்கள் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வாடியது.

Advertisement

   இதைத் தொடர்ந்து மின்தடையால் மும்முனை மின்சாரமும் கிடைக்கவில்லை. இதனால் கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் எடுக்க முடியவில்லை.

  தற்போது முளை விட்டு கதிர்  வெளியே வரும் நிலையில் இருந்த மக்காசோளம் கருகி விட்டது.  

   விவசாயத்துக்கு செலவழிக்கப்பட்ட பணம் வீணாகி விட்டதாக இப்பகுதி விவசாயிகள் வருந்துகின்றனர். திம்மன்பட்டியைச் சேர்ந்த விவசாயி திரவியம் கூறியதாவது: நான் 15 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். பருவமழை பொய்த்ததால் கருகி விட்டது. அரசு நிவாரண உதவி வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பிழைக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.