முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 147 பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. சார்பில் உலக புத்தக தினம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் வாசித்தல் திறனை வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் சுமார் 300 புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கொத்து வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:26 AM
பகிர்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய்த்திற்குட்பட்ட 147 பள்ளிகளில் உலக புத்தக தினம் அனுசரிக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் வாசித்தல் திறனை வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் சுமார் 300 புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கொத்து வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

உலக புத்தக தினத்தையொட்டி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சௌ.மேரி தலைமையில் இதற்கான விழா நடைபெற்றது. ஆசிரியப் பயிற்றுநர் பொற்கொடி வரவேற்றார். மாணவர்களின் வாசிப்புத் திறனை ஆய்வு செய்து பின்னர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கி.ராமசுப்பு பேசுகையில் கூறியதாவது:

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே எழுத்தாளர்கள் மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் ப.வனிதா, கு.கிருஷ்ணமூர்த்தி, மா.வாசுகி, கி.பெத்தனசாமி, சு.முருகு திருநாவுக்கரசு, ரா.உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →