அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4 நாள் பணியிடை பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 80 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான 4 நாள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
விருதுநகர்அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4 நாள் பணியிடை பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 80 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான 4 நாள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 80 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான 4 நாள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. கருத்தாளர் எஸ்.காசிவேல் வரவேற்றார்.
பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அதிகமான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இப் பயிற்சி பாடதிட்டத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் மட்டமல்லாது விரிவான பல சிறப்புக் கருத்துக்களையும் உள்ளடக்கி பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் மனநிலைக் கேற்ப ஆசிரியர்கள் கற்பிக்கவும், மாணவர்களுக்கிடையே ஏற்படும் இடர்களைக் களையவும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்றார்.முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வராஜ்குமார் வரவேற்றார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைமை ஆசிரியருமான எம்.அர்ச்சுணன் வாழ்த்துரை வழங்கினார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக எஸ்.காசிவேல், என்.வெங்கிடசாமி, பேராசிரியர் எஸ்.செல்வநாயகம் ஆகியோர் செயல்படுகின்றனர்.