முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு தரப்பு தலித்களிடையே மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் பெரிய அளவில் முற்றிவிடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு தரப்பு தலித்களிடையே மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் பெரிய அளவில் முற்றிவிடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் பெரிய அளவில் முற்றிவிடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது, போலீஸாரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

ஸ்ரீவி்லலிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டியில் பல ஆண்டுகளாகவே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சிறுசிறு பிரச்னைகள் மோதலாக மாறி, பொருட்கள் சேதம், உயிர் சேதம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

வ.புதுப்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் மோசே (50). இவர் புதுப்பட்டியைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் தோப்பை கட்டு குத்தகைக்கு எடுத்து பாடுபட்டு வருகிறார். அடையாளம் தெரியாத நபர் தோட்டதில் உள்ள மோட்டார் அறையில் இவரது மகன் பெயர் மற்றும் பட்டப் பெயரை (குணசேகரன்-குட்டி) எழுதி உன் வாழ்வு முடிந்தது. இப்படிக்கு அ 21 என்று எழுதி ஈமக்கிரியைகைகள் செய்துள்ளேன் என குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.

இது குறித்து வெள்ளிக்கிழமை வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மோசே புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →