முகப்பு
விருதுநகர்

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக, பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.      

Updated On : 17 பிப்ரவரி, 2013 at 12:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:59 PM

காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக, பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.      

   பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சின்னமநாயுடு முன்னிலை வகித்தார். நிறுவனர் மங்களேஸ்வரி வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் காந்திமதி துவக்கி வைத்தார்.    மாணவிகள், பாலியல் தொந்தரவுக்கு உட்படும் போது, உதவிக்கு 1098, 1068 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு, உதவி பெறலாம் என, வழக்குரைஞர் குருலட்சுமி பேசினார். சிறப்பு எஸ்.ஐ., பிச்சைபாண்டி மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசகர் பாண்டிபெருமாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.