சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பற்றி...
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை திடீரென பயங்கர வெடி சப்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் சிக்கியிருப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்திருக்கும் நிலையில், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சுற்று வட்டார கிராம மக்கள் சம்பவ இடத்தை நெருங்காமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
Massive Explosion at Firecracker Factory Near Sattur!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.