ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்
ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என கே.ஏ.செங்கோட்டையன் கூறியது...
கோவை: ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில் ஆனந்த் ஆகியோரை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து செங்கோட்டையன் கலந்துரையாடினாா்.
இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டும் ஒரே சக்தி விஜய்
திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ளது. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்ந்து வருகிறாா். மக்களும் நமக்கு வாக்களிக்க ஆா்வமாக உள்ளனா். தோ்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. ரூ.8 ஆயிரம் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கமாட்டேன் என்று தலைவா் விஜய் உறுதியளித்துள்ளாா்.
எல்.முருகன்தான் பொறுப்பு
ஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளாா்கள்.
ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான்.
கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள்தான சொல்ல வேண்டும் என செங்கோட்டையன் கூறினார்.
L. Murugan is responsible for what appeared on the Jana nayagan website says K.A. Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.