முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு லயன்ஸ் பள்ளியில் 30-வது ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் உள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 30-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைவர் அ.ஜெயபாலன் வரவேற்றார். தாளாளர் ஐ.கணேசன், சிறப்பு

விருதுநகர்

வத்திராயிருப்பு லயன்ஸ் பள்ளியில் 30-வது ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் உள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 30-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைவர் அ.ஜெயபாலன் வரவேற்றார். தாளாளர் ஐ.கணேசன், சிறப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:30 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் உள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 30-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைவர் அ.ஜெயபாலன் வரவேற்றார். தாளாளர் ஐ.கணேசன், சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். நிர்வாக அலுவலர் க.மாரியப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் அகில இந்திய ஜூனியர் அதலெட்டிக் யோகா போட்டியில் 7-வது இடம் பெற்ற 9-ம் வகுப்பு மாணவி ஏ.பவித்ரா, அகில இந்திய கராத்தே ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 மற்றும் மூன்றாம் இடம் பெற்ற ஜே.பிரேம், எம்.பிரவின்குமார், ஓவியப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற 2-ம் வகுப்பு மாணவர் ஏ.தீபக் தர்ஷன்குமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி என்.பவித்ரா, அறிவியல் ஆசிரியை ஸ்டெல்லா மேரி ஆகியோர் கௌரவித்து பாரட்டப்பட்டனர்.

வீட்டுக்கொரு விஞ்ஞானி அறிவியல் போட்டியில், வாழை இலை பதப்படுத்துதல் என்ற அறிவியல் படைப்புக்காக முதல் பரிசு பெற்ற இளம் விஞ்ஞானி பட்டம் பெற்ற மாணவர் எம்.டெனித் ஆதித்தியாவிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.விழாவில் பள்ளி பொருளாளர் சு.விஜயகுமார், முதல்வர் (பொறுப்பு) ஜி.ரஷீலா தவமணி, அரிமா சங்கத் தலைவர் தெ.சுந்தரமகாலிங்கம், செயலாளர் கூ.கூடலிங்கம்,  டாக்டர் கா.பால்சாமி, போ.சாது கணபதிராமன், சோம சீனிவாசன், வே.சதாசிவம் மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். பள்ளி பொருளாளர் சு.விஜயகுமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →