முகப்பு
விருதுநகர்

மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு: 2 பேர் கைது

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 14 ஜனவரி, 2013 at 12:35 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:32 PM

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (26). இவர் அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு பாக்கியராஜ் தனது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இரவு 10 மணி அளவில் செல்வம், பிரசாத், ரமேஷ்பாபு ஆகியோர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்களாம். பைக் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் பாக்கியராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்து தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பாக்கியராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்களாம்.

 இதுகுறித்து காரியாபட்டி போலீஸில் பாக்கியராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வம், பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ்பாபுவை தேடி வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.