முகப்பு
விருதுநகர்

விலையில்லா பொருள்கள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள சந்திரங்குளம், தொட்டியங்குளம், வி.நாங்கூர், பந்தனேந்தல் ஆகிய கிராமங்களில் 800 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 26 ஜனவரி, 2013 at 12:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:40 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள சந்திரங்குளம், தொட்டியங்குளம், வி.நாங்கூர், பந்தனேந்தல் ஆகிய கிராமங்களில் 800 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

   நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை ஒன்றியக்குழு துணைத் தலைவர் இராமமூர்த்தி வழங்கிப் பேசினார்.

    மண்டல துணை வட்டாட்சியர்கள் அய்யாகுட்டி, குயிலினி, மாவட்ட கவுன்சிலர் விமலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், பழனிச்சாமி, கார்த்திகாதேவி, ஊராட்சித் தலைவர்கள் மாரியப்பன், பொட்டியம்மாள், சின்னபிள்ளை, மற்றும் ஊராட்சி செயலர்கள், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துபாண்டி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.