முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிகளில் குடியரசு நாள் விழா

நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிகளில் குடியரசு நாள் விழா

நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு நாள் விழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் என்.ஏ.பாலசுப்பிரமணியம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலசலிங்கம் தேசிய கொடியை ஏற்றினார். ஆசிரியர்கள் செந்தில்குமார், ஜெயக்குமார், ஜே.சுந்தரேசன் மற்றும் கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜேக்கப் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

சி.எம்.எஸ்.: ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா தலைமை ஆசிரியை பி.ஞானலெட் சொர்ணகுமாரி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ சுபேதார் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜான் முத்துராஜ், மாணவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவித் தலைமை ஆசிரியர் டேவிட் ஞானசேகரன் நன்றி கூறினார்.

மாவட்ட நீதிமன்றம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வட்டாட்சியர் அலுவலகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஐ.திரௌபதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

வட்டார வளமையம்: கிருஷ்ணன்கோவிலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் ராமசுப்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →