ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே பேரணியை ரோட்டரி தலைவரும், பசுமை பாரத இயக்க தலைவருமான துரைப்பாண்டியன் தலைமையில், நகர் காவல்
விருதுநகர்ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே பேரணியை ரோட்டரி தலைவரும், பசுமை பாரத இயக்க தலைவருமான துரைப்பாண்டியன் தலைமையில், நகர் காவல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே பேரணியை ரோட்டரி தலைவரும், பசுமை பாரத இயக்க தலைவருமான துரைப்பாண்டியன் தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.பேரணியில், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பல்வேறு தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். பேரணி நகரின் பல்வேறு வீதிகளின் வழியே வந்து ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு நிறைவு பெற்றது.பின்னர் வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் செல்வக்குமார், பசுமைப் பெண்கள் இயக்கத்தின் ரெங்கநாயகி, மஞ்சுளா, ஜோதி மற்றும் மகேந்திரன், சண்முகநாதன், குருநாதன், ஜான், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.