விருதுநகர் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழா
இப்பள்ளியின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அல்லம்பட்டி மஹாஜன சபைத்தலைவர் ரெங்கராஜன், செயலர் மணிசங்கரன் ஆகியோர் முன்னிலை
விருதுநகர் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இப்பள்ளியின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக்குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அல்லம்பட்டி மஹாஜன சபைத்தலைவர் ரெங்கராஜன், செயலர் மணிசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கணேசன்(பொறுப்பு) வரவேற்புரை வழங்கினார். இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், 90 பேருக்கு வழங்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், உறுப்பினர்கள் முகமது நயினார், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இறுதியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றியுரை கூறினார்.