முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்படும்: அமைச்சர் உறுதி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ.22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அரசு

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்படும்: அமைச்சர் உறுதி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ.22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அரசு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:46 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் மற்றும் இப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இரு வழிச் சாலையாக மாற்றி தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ.22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அரசு வழக்குரைஞர் பி.அய்யனார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜூ வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இரு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். அப்போது தான் இப் பகுதி முழுமையான வளர்ச்சி அடைய முடியும். கடந்த இரு மாத இடைவெளியில் இங்கு இரண்டு முறை மாவட்ட அமைச்சர் மக்களைத் தேடி அதிகாரிகளுடன் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அரசு ஏழை மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார் பொன்னுப்பாண்டியன்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கால்நடை மருந்தகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர்-மமசாபுரம் சாலையை இரு வழிச் சாலையைக மாற்ற ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். விரைவில் இச் சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்படும்.

தமிழக முதல்வர் எல்லா கிராம மக்களுக்கும் நகர்புறத்தில் கிடைக்கும் அனைத்து அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பாடுபட்டு வருகிறார். தமிழகத்தில் மற்றுமோர் வெண் புரட்சிக்கு வித்திட்டுள்ள முதல்வர், பெண்கள் தங்கள் வாழ்வாதரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் கறவை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை வழங்கி வருகிறார். இவற்றை சிறப்பாக பராமரிப்பதற்கு தேவையான மருத்துவமனைகளையும் நவீன வசதிகளுடன் அமைத்துத் தந்து வருகிறார். முதல்வர் ஜெயலலிதா, அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளுக்காக  போராடி வெற்றி கண்டு வருகிறார் என்றார்.

வருவாய்த் துறை சார்பில் முதியோர் உதவித் தொகை உள்ளிடட் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சொ.தெய்வநாயகம், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகர், மாவட்ட அரசுப் பணியாளர் (பேரூராட்சிகள் துறை) சங்கத் தலைவர் ஆ.காமராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சு.பாலம்மாள், செ.ஜெயச்சந்திரன், ந.அண்ணாசெல்வம், வே.ரமாபிரபா, பொ.ராஜாக்கனி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மல்லி எஸ்.ஆர்.துரைப்பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விருதுநகர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சி.சிவானந்தம் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →