விருதுநகர்

ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் திருச்சுழி ஒன்றியம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வட்டார அளவில் ம.ரெட்டியபட்டியில்

கல்யாணி வெங்கடராமன்

அனைவருக்கும் கல்வி இயக்கம் திருச்சுழி ஒன்றியம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வட்டார அளவில் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இப்பயிற்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்கள் 112 பேர் கலந்து கொண்டனர்.

     மாணவர்களிடம் சுகாதாரம், சர்வதேச மனப்பான்மையை வளர்த்தல், கணினி முதலிய பல்லூடக வசதிகளை கவனமாக கையாள்வதற்கான முறைகள் போன்ற தலைப்புகளில் கருத்துகள் வழங்கப்பட்டன. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.  ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், சுந்தரமகாலிங்கம், கோமதி, சாந்தி ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT