விருதுநகர்

மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 5 சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறினர்.

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 5 சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறினர்.

   விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ராஜகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்டது போத்தம்பட்டி கிராமம். இக்கிராமத்தின் தெற்கு பகுதியில் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் போத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகள்கள் மாதரசி (13), ரம்யா (9), கோபால்ராஜ் மகள் கலைசெல்வி (14), சண்முகராஜ் மகள் பொன்மணி (15), ராமசாமி மகள் ஆர். ரம்யா (14) ஆகியோர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் போத்தம்பட்டி மற்றும் எம். ரெட்டியபட்டி அரசு பள்ளிகளில் படித்தனர்.

  கடந்த ஞாயிற்றுக் கிழமை குளிப்பதற்காக மாணவிகள் கண்மாய்க்கு சென்றனர். அப்போது கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்  சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலர் ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுபாண்டி, அனைந்திந்திய மாணவ பெருமன்ற மாநிலத் தலைவர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், பழனிக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர்.

  மேலும், உயிரிழந்த மாணவிகளுக்கு விரைவில் அரசு நிவாரண நிதியை வழங்கிட வலியுறுத்துவோம் என்று அவர்கள் கூறினர். திருச்சுழி ஒன்றியக்குழுத் தலைவர் இந்திராமோகன் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி வழங்கினார். சிவகாசி எம்.பி. மாணிக்கம் தாகூர் கிராமத்திற்கு சென்று பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT