விருதுநகர்

கிராமப் பகுதியில் கூடுதலாக நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும்: ஆட்சியருக்கு கோரிக்கை

கிராமப்புறங்களில் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்யாணி வெங்கடராமன்

கிராமப்புறங்களில் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றியச் செயலாளர் சின்னராசா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

திருச்சுழி அருகே நரிக்குடி, இலுப்பையூர், விடத்தகுளம், தமிழ்பாடி, சித்தலக்குண்டு, ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, ஆலடிபட்டி, பொம்மகோட்டை, நாரத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், புலிக்குறிச்சி, குச்சம்பட்டி புதூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரு டிரிப் மட்டுமே டவுண் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகளின் நெரிசல் அதிகம் உள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

   மேலும் நகர்ப் பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ் வசதி இன்றி தவிக்கின்றனர். சில கிராமங்களில் இருந்து ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் 20 பேர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வருகின்றனர். மேலும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்கவேண்டும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 ஏராளான பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்று அந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT