விருதுநகர்

கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு

கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக, பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கல்யாணி வெங்கடராமன்

கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக, பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன். பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரேமா (23). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: எனக்கும், குமரேசனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது 14 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வரதட்சிணையாக வழங்கப்பட்டது.  இப்போது கூடுதலாக நகை, ரொக்கம் கேட்கிறார்கள். எனவே எனது கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார், குமரேசன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT